போடியின் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஜெமினி ஆட்சி காலங்களில் முறையாக பராமரிப்பு செய்து வருகின்றனர். இன்று வரை பராமரிப்பு செய்து வரும் நிலையில் இத்தலம் இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வருகின்றனர்.
இத்தளத்தில் ஓர் ஆண்டும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, மீனாட்சி திருக்கல்யாணம், திருக்கார்த்திகை உள்ளிட்டவை சிறப்பாக பூஜை நடைபெறுவது வழக்கம்.
இன்று 2025 புத்தாண்டை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வானைக்கு 18 வகையான சோடா அபிஷேகமும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
பூஜை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த சேவல் கொடிமரம் முன்பு சிறிது நேரம் நின்று விட்டு அங்கிருந்து கோவிலிலே ஒரு முறை வலம் வந்த பின் அங்கு உள்ள மயிலிறியை நின்று மயிலை தரிசனம் செய்த பின் அச்சேவள் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற மனிதர்களோடு மனிதர்களாக பக்தருடன் தானும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தன இதனைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். சேவலை தொட்டு வணங்கினர், மேலும் தீவார்தனை முடிந்த பின் சேவல் எங்கு சென்றது என தெரியவில்லை.
திடீரென இன்று புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்கு வந்த சேவல் முருகப்பெருமானை தரிசனம் செய்ததை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்து சேவலை கண்டு களித்தனர்.
2024 ஆம் ஆண்டு ஹனுமான் ஜெயந்தி உடன் துவங்கிய ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அனுமான் ஜெயந்தி உடன் முடிவடைந்து 31 ஆம் தேதி 2024 ஆண்டு அம்மாவாசை உடன் இருட்டில் மூழ்கினர்.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்வேறு இன்னல்களிலும் புயல்களிலும் சிக்கி அனுமான் தாவி தாவி செல்வதைப் போன்று பொதுமக்களும் 2024 ஆம் ஆண்டு வெள்ளத்திலும் புயலிலும் சிக்கித் தாவித்தாவி உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.
ஆனால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி உடன் துவங்கி டிசம்பர் 30 வைகுண்ட ஏகாதேசி உடன் முடிவடைகிறது. ஆனால் 2025 ஜனவரி ஒன்றாம் தேதி வளர்பிறையில் முதல் பௌர்ணமிபிறையாக துவங்குவதால் இவ்வாண்டு திருமணம் ஆகாத கன்னி பெண்கள் திருமணமாகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், இயற்கை வளம் பெருகும், நாடு சூட்சம் பெறும், பசி பட்டினி இன்றி புயல் வெள்ளம் சூறாவளி இன்றி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என சோதிடர்களும் அச்சகர்களும் தெரிவித்தனர்.