
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட உத்தராகண்ட் முதலமைச்சர்!
சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குள் அமைந்துள்ள கேண்டீனை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இங்கு போடப்படும் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட தின்பண்டங்களை எலி உண்ணுவதாக பொதுமக்களும், நோயாளிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இது சம்மந்தமாக கேண்டீன் நிர்வாகத்திடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்களின் புகாரை ஏற்று, கேண்டீனை மூட உத்தரவிட்டு, மருத்துவமனை முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!
இந்த மருத்துவமனையில் சென்னை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்துச் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். சிகிச்சை அளவில் இந்த மருத்துவமனை உயர்தரத்தில் இருந்தாலும், உட்கட்டமைப்புச் சார்ந்த விஷயங்களில் மருத்துவத்திற்கு நிகராக இல்லை என்ற புகாரை பொதுமக்கள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.