Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி

-

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 17 மாவட்டங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி

போதிதர்மா சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சி பள்ளி மற்றும் முத்தமிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி ஆவடியில் விஜயந்தா சீனியர் செக்கெண்டரி பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு சிறப்பு காவல் 13 & 5ம் அணி உதவி தளவாய் கோமதி, மற்றும் ஜி ஜே பல்நோக்கு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராஜேஷ்

திண் ஊர்தி தொழிற்சாலை பொது மேலாளரும் முத்தமிழ் மன்ற தலைவர் கதிர்வேல், தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல் 13 & 5ம் அணி உதவி தளவாய் கோமதி, மற்றும் ஜி ஜே பல்நோக்கு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிலம்ப போட்டியை துவக்கி வைத்தனர்.

ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள் கம்பி,வால் வீச்சு, மான் கொம்பு சுத்துதல் மற்றும் சிறப்பு ஆயுதங்கள்

 

இதில் சுமார் 17 மாவட்டத்தில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள் கம்பி,வால் வீச்சு, மான் கொம்பு சுத்துதல் மற்றும் சிறப்பு ஆயுதங்கள் என பல்வேறு கலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள் கம்பி,வால் வீச்சு, மான் கொம்பு சுத்துதல் மற்றும் சிறப்பு ஆயுதங்கள்

இதில் 6 வயது தொடங்கி 45 வயதுக்குட்பட்ட சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக சிறுவர் சிறுமிகள் இணைந்து பறை இசைத்தது சிறப்பு விருந்தினர்கள் உட்பட காண்போரை வெகுவாக கவர்ந்தது.

துணை தலைவர்கள் ஞானமூர்த்தி, நாகரத்தினம், போதிதர்மா சிலம்பம் நிறுவனர் சிலம்பம்தர்மா, துணை தலைவர் நாககுமரன்

இந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் மன்ற துணை தலைவர்கள் ஞானமூர்த்தி, நாகரத்தினம், போதிதர்மா சிலம்பம் நிறுவனர் சிலம்பம்தர்மா, துணை தலைவர் நாககுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

MUST READ