Homeசெய்திகள்தமிழ்நாடு18% GST வரிவிதிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு வணிகர் சங்க...

18% GST வரிவிதிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவிப்பு

-

- Advertisement -

வியாபர தளங்களின் வாடகை மீதான  18% விழுக்காடு GST வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளாா்.GST வரிவிதிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் - வணிகர் சங்க பேரவை அறிவிப்புவாடகை கட்டிடங்களில்  வியாபாரம் செய்யும் வணிகர்களின் மீது 18% விழுக்காடு வாடகைக்கான GST வரி விதித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து அந்த வாடகை வரி விதிப்பை  திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு வணிக நிறுவனங்களுக்கு விதித்து வரும்  வரிவிதிப்பை அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரி முறைப்படுத்த வலியுறுத்தியும், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 25 வது ஆண்டு வெள்ளி விழா,மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் 42 வது வணிகர் தின மாநாட்டு விளக்க கூட்டம் என முப்பெரும் விழா பெரம்பலூரில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின்  மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில். பெரம்பலூர் மாவட்டத்தில் நீராதாரத்ப்தை பெருக்கிட மழைநீர் சேகரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் , பெருமளவில் வருவாய்ஈட்டும் திரைப்பட  பிரபலங்கள் மாவட்டம் தோறும் நீர் மேலாண்மைக்கு முன்வர வேண்டும். ரயில்வே சேவை இல்லாத . பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில்வேவழித்தடம் அமைத்து தர ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் வணிகர் சங்கம் சார்பில் வலியுறுத்துதல் மற்றும் ஒன்றிய அரசின் GST வரி வரையரை உள்ளிட்டவை குறித்துபொதுதீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வியாபாரத் தளங்களுக்கான வாடகைக்கு 18% விழுக்காடு GST வரி விதிப்பு என்பது சிறு, குறு வியாபாரிகளை பெரிதும் பாதிக்கும் ஒன்றிய அரசு அதை திரும்ப பெற வேண்டும் , அதே போல் மாநில அரசு  கட்டிட வரி, குப்பை வரி போன்றவற்றை முறைபடுத்தி மாநிலம் முழுதும் ஒரே மாதிரி வரிவிதிப்பு செய்திட வலியுறுத்தியும், வரும் 11 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டனஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தார். மேலும் தமிழில் பெயர்பலகை வைப்பது குறித்து அனைத்து வணிகர் களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தலில் வணிகங்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தங்களது  2025 ஆம் ஆண்டு  மே – 5 ஆம் தேதி நடைபெற உள்ள வணிகர் சங்க பேரவையின் மாநில மாநாட்டில் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரி – விழுப்புரம் – நாகை : 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட

MUST READ