Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக அலுவலகத்தில் பாரத மாதா சிலை- இரவோடு இரவாக அகற்றம்

பாஜக அலுவலகத்தில் பாரத மாதா சிலை- இரவோடு இரவாக அகற்றம்

-

பாஜக அலுவலகத்தில் பாரத மாதா சிலை- இரவோடு இரவாக அகற்றம்

விருதுநகர் பாரதிய ஜனதா அலுவலகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பாரதா மாதா சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பாரத மாதா சிலை!பாஜக அலுவலகத்தில் பரபரப்பு!

விருதுநகர் சாத்தூர் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைமை அலுவலகம் உள்ளது. இதில் நேற்று மாலை அனுமதியின்றி பாரதா மாதா சிலை அமைக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் அதனை அகற்றுமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். ஆனால் அகற்ற மறுத்த அவர்கள் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஏடிஎஸ்பி அசோகன், வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சிலையை வைக்க உரிய அனுமதி பெறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து சிலை துணி கொண்டு மூடப்பட்டது. பின்னர் பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். பின்னர் சிலையை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதனையடுத்து அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி.கருண்காரத் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதிகாலை 3 மணி அளவில் சிலை அகற்றப்பட்டது.

MUST READ