கோவை, தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தொண்டாமுத்தூரில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்க ரூ.5 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள். இரண்டு மாவட்டங்களில் கள ஆய்வின் போது முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியீடு.
தொண்டாமுத்தூர் பகுதியில் யானை மனித மோதல்களை தடுக்கும் நோக்கில் ரூ. 7 கோடி செலவில் 10 கிமீ நீளத்துக்கு நவீன யானைத் தடுப்பு வேலி அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால், அரசு இந்த பணிக்காக முதற்கட்டமாக ரூ. 5 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இந்த நிதி வனவியல் மற்றும் வனவிலங்குகளுக்கான மூலதனச் செலவு, வனவிலங்கு பாதுகாப்பு, மேம்பாடு போன்ற திட்டங்களுக்கான மாநில செலவுத்திட்டத்திலிருந்து பெறப்படும். சட்டமன்றத்தின் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக தற்செயல் நிதியில் இருந்து செலவிடலாம் எனவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், யானைகள் ஏற்படுத்தும் பயிர்ச் சேதமும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய அரசு பள்ளி – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை