Homeசெய்திகள்தமிழ்நாடுகல்குவாரி வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கல்குவாரி வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

-

- Advertisement -

 

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

விருதுநகர் காரியாபட்டியில் கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்துக்கு அண்ணாமலை வாழ்த்து!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டம், டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நீத்தாரை நடுதல் வைத்து நினைவேந்துவது தமிழர் மரபு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ