Homeசெய்திகள்தமிழ்நாடு9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

-

புயல்
தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம்( மே-22) காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இது மெல்ல வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் வடகிழக்கு திசையில் நகர்ந்து , மத்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

  புயல் காரணமாக துறைமுகங்களில்  எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளைய தினம்( மே-25) காலையில் புயலாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் எனவும், தொடர்ந்து இது வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று 26ம் தேதி நள்ளிரவில் வங்கதேசத்திற்கு அருகே சாகர் தீவுக்கும், கேப்புபராவுக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

MUST READ