Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம் - ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சட்டம் – ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

-

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பேணிக் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த  திமுக அரசின் மூன்றாண்டு சாதனை.
edappadi palanisamy
வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல்
போட்டோஷூட் நடத்திய திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த 3 ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ