6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது.
ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவக்கி ஒப்பந்தத்தை இறுதி படுத்த வேண்டும்,உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட 10 மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஜனவரி 5ஆம் தேதியோ அல்லது அதற்குப் பின்பாக ஆறு வார காலத்திற்குள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தது.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரக அலுவலகத்தில் தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் போக்குவரத்து துறையை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்று உள்ளனர். வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.