Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!

மாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!

-

- Advertisement -

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை பொது வெளியில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள உத்தரவில், அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தொடர்பான வழக்கு விவரங்களை சட்டத்திற்கு விரோதமாகவும் முரணாகவும் பொதுவெளியில் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக மாணவி வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிடக்கூடிய நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

chennai commissioner
chennai commissioner

மேலும் ஒரு தனி நபரின் தகவல்களை, அவர்களது உரிமை இல்லாமல் பொது வெளியில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதால், அவ்வாறு செய்யக்கூடிய சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

 

MUST READ