Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வுக்கு படித்துவந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீட் தேர்வுக்கு படித்துவந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

-

- Advertisement -

நீட் தேர்வுக்கு படித்துவந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வடலூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை; கடலூரில்  பரபரப்பு | nakkheeran

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9 பகுதியை சேர்ந்தவர் உத்திராபதி. இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மகள் நிஷா (வயது 18) கடந்த ஆண்டு நெய்வேலி டவுன் ஷிப்ல் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு, இந்திரா நகரில் உள்ள தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார்.

இந்நிலையில் மாலை பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் பயணிகள் ரயில் வடலூர் வழியாக கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது வடலூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகே நின்ற நிஷா திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நிஷாவின் தந்தை உத்திராபதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ