Homeசெய்திகள்தமிழ்நாடுபொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் -தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் -தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

-

 

பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் -தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம், தரவரிசைப் பட்டியலை நாளை உயர் கல்வி அமைச்சர் வெளியீடு

2024 – 2025 கல்வி ஆண்டிற்கான  பொறியியல் கலந்தாய்விற்கு 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நாளை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது என தெிரிவித்துள்ளனர்.

பி.இ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 2,09, 645 மாணவர்கள் கட்டணம் செலுத்தியும், 1,93,853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024 -25 ம் கல்வியாண்டில் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மாணவர்கள் மே 6ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 10,11 ஆகியத் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

பெங்களுரு: பற்றி எரிந்த அரசு பேருந்து – உயிர் தப்பிய பயணிகள்

2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்கள் கட்டணம் செலுத்தியும், 1லட்சத்து 93 ஆயிரத்து 853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட்டணம் செலுத்திய 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் இன்று மாணவர் சேர்க்கை இணையதளமான www.tneaonline.org ல் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுப்பிரிவில் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 4489 விளையாட்டு வீரர்களுக்கு மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் வரும் 23ம் தேதி வரையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

கடந்த 2023ம் கல்வியாண்டில் 2 லட்சத்து 29ஆயிரத்து 175 மாணவர்கள் பதிவு செய்ததில், ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 மாணவர்கள் கட்டணம் செலுத்தினர். அவர்களில் தகுதியான ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதே 2022 ம் கல்வியாண்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பதிவு செய்ததில், 1 லட்சத்து 67ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி கலந்தாய்வில் பங்கேற்றனர்.

கடந்தாண்டு கலந்தாய்வில் 474 கல்லூரிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 196 இடங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியது. அதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 887 மாணவர்கள் சேர்ந்தனர். அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்கான மொத்த இடங்கள் 12,136 ஆகும். அதில் 9960 மாணவர்கள் சேர்ந்தனர்.

இந்தாண்டு கலந்தாய்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்களான சான்றிதழ்கள் ஜூன் 13ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் சரிபார்க்கும் பணிகள் தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. கட்டணங்களை செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது இருந்தாலும் அதனையும் பெற்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் தகுதியான மாணவர்களுக்கு ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது

இந்தாண்டிற்கான பொறியியல் கலந்தாய்விற்கு 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நாளை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிடுவார் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து நாளைய தினமே பொறியியல் கலந்தாய்வு தேதி குறித்து முறையான அறிவிப்பை அமைச்சர் வெளியிடுவார் என அதிகாரிகள் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

MUST READ