Homeசெய்திகள்தமிழ்நாடுநான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சென்னை திரும்பினர்

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சென்னை திரும்பினர்

-

தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்று சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சென்னை திரும்பினர்தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கனவு திட்டமான நான்-முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் உடன் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.அந்தவகையில் தற்பொழுது லண்டனில் உள்ள நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வாரகாலம் திறன்மேம்பாட்டு பயிற்சிக்காக பிரிட்டீஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் 25 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் தற்போது பயிற்சிகளை சிறப்பாக நிறைவு செய்துவிட்டு விமானம் மூலம் இன்று காலை சென்னை திரும்பினர்.சிறப்பாக பயிற்சிகளை நிறைவு செய்து லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் உற்சாகமாக   வரவேற்கப்பட்டனா்.

இது குறித்து நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள் கூறுகையில்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இணைந்து நிறைய பயிற்சிகள் பெற்றதில் அதன் மூலம் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கு மிகவும் ஏதுவாக இருந்தது. மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வெளிநாடு சென்றது ஒரு புது அனுபவமாகவும்,குறிப்பாக  முதல் முறையாக விமானத்தில் செல்வதற்கான வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்தது எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனா்.

மேலும் இந்த பயிற்சியின் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் அதிகப்படியாக வருவதாகவும் இந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மற்றும் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி எனவும் உற்சாகமாக தெரிவித்துள்ளனா்.

MUST READ