Homeசெய்திகள்தமிழ்நாடுகும்பக்கரை அருவியில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

-

- Advertisement -

பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தீபாவளி விடுமுறையை ஒட்டி இன்று அருவிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 11 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது.

இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றினர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளதால் பகல் 12 மணி முதல் சுற்றுலா பயணிகளை குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் தடை விதித்து வனத்துறையினர் உத்தரரவிட்டனர்.

தொடர் மழையின் காரணமாக கடந்த 28ஆம் தேதி வரை 8 நாட்களாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூடப்பட்டிருந்தது. நீர்வரத்து சீரானதை அடுத்து, கும்பக்கரை அருவியில் குளிக்க கடந்த 4 நாட்களாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

MUST READ