Homeசெய்திகள்தமிழ்நாடு"வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்"- வேட்பாளர் ராயபுரம் மனோ குற்றச்சாட்டு!

“வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்”- வேட்பாளர் ராயபுரம் மனோ குற்றச்சாட்டு!

-

"வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்"- வேட்பாளர் ராயபுரம் மனோ குற்றச்சாட்டு!

வடசென்னை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராயபுரம் மனோ, ராயபுரம், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவுத் திரட்டினார்.

“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!

பின்னர் அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து‌ ஆதரவு கேட்டுள்ளோம். அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும். வடசென்னையில் எனக்கு ஆதரவை வழங்க வேண்டும் என வேண்டுகோளை வைத்துள்ளோம்.

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு கள்ள உறவு இருப்பதாக கூறுவது முழுவதும் மறுக்கத்தக்கது. இனிமேல் எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களுக்கு கள்ள உறவு வைப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? கள்ள உறவு வைப்பதற்கு எந்த காரணம் இல்லை; எங்களுக்கு என்ன தேவை இருக்கிறது? மடியில் கனமிருந்ததால் வழியில் பயம் இருக்கும். நாங்கள் தைரியமாக நிற்கின்றோம்; நாங்கள் எதற்கும் பயப்படவில்லை.

வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனுடைய வெளிப்பாடாக அவர் உளறி வருகிறார். சீக்கிரம் தேர்தல் முடிந்து அவர் நன்றாக ஓய்வெடுத்தால் தான் சாதாரணமாக மனநிலைக்கு வருவார். ஒரு தலைவர் என்பவர் என்ன பேச வேண்டுமோ, அதை பேச வேண்டும், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுபவர் தலைவரே கிடையாது. அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. பாவம் பா.ஜ.க.விற்கு போராத காலம் அண்ணாமலையை தமிழக தலைவராக வைத்துள்ளார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.

ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

தமிழகத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கின்றபோது 13 முறை தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். ஆனால் முடிவு சாதகமாக அமையவில்லை. அப்படி இருக்கின்ற பொழுது இப்பொழுது மத்திய அமைச்சர்கள் மொழி தெரியாமல் வந்து பேசிட்டு போவதில் என்ன பயன் இருக்கிறது? தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் தமிழர்களுக்கு உற்சாகம் அடைவார்கள்; தமிழ்நாட்டில் இந்தியில் பேசினால் அது ரசித்து கேட்பார்களா? கேட்க மாட்டார்கள்? மத்திய அமைச்சர்கள் வந்து ஒரு பயனும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ