
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குளிர்ச்சியான சூழலை பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, கோடை மழை பெய்தால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!
வழக்கத்தை விட, தமிழகத்தில் முன்கூட்டியே கோடைக்காலம் தொடங்கிய நிலையில், கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெப்பம் அதிகரித்து வருவதால், ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.