Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

-

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை, அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து செந்தில்பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இன்று முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார் என சொன்னபோது அவரது உடல் நிலையை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, மருத்துவ சிகிச்சை பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அமலாக்கத்துறை காவலில் எடுப்பதை அடுத்து, புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்பாலாஜி உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கப்படுகிறார்.

MUST READ