சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் தண்டனை தொடர்பாக அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பதவியை இழந்தார் பொன்முடி: அடுத்தது என்ன?
அப்போது அவர் கூறியதாவது, “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்வோம். பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட வழக்கு. உச்சநீதிமன்றத்தை அணுகி பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் விடுதலைப் பெற்றுத் தருவோம். சொத்துக்குவிப்புக்கு ஆதாரங்கள் இல்லாததால் தான் கீழ்நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!
இதனிடையே, பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.