சென்னை கோட்டூர்புரத்தில் இன்று (செப்.22) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடகா அரசு ஆளாக நேரிடும்.
சென்னை- திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயில் சேவைக்கான கட்டணம் வெளியீடு!
விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீரை 15 நாட்களுக்கு திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கை தர கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய உத்தரவு படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகா உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை- நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
சட்ட ரீதியாகச் சென்று கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.