கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு குறைந்தது ரூபாய் 30 லட்சத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023
கழிவுநீர் அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “கழிவுநீர் அகற்றும் போது, உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு குறைந்தது ரூபாய் 30 லட்சத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை – பொதுமக்கள் பயப்பட வேண்டாம்
அதேபோல், கழிவுநீர் அகற்றும் போது படுகாயமடைந்து நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தால் ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.