Homeசெய்திகள்தமிழ்நாடுஅமலாக்கத்துறைக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

அமலாக்கத்துறைக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

-

- Advertisement -

 

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று (ஜூன் 21) பிற்பகல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய கோடைக்கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நபரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்கக் கோரியது. அதிருப்தி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் உள்ள போது, மருத்துவர்களின் கருத்தைக் கொண்டு தான் விசாரணை நடத்த முடியும் என தெரிவித்த நீதிபதிகள், ஆட்கொணர்வு மீது உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தைச் சந்தேகிக்க முடியாது எனக் கூறினர்.

மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!

இந்த வழக்கில் அமலாக்கத்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில், உயர்நீதிமன்ற விசாரணை சரியானதாக இருக்கும் என நம்புவதாகவும், செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்த பிறகு, அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவித்தனர்.

MUST READ