Homeசெய்திகள்தமிழ்நாடுபேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

-

 

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
File Photo

சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், கடலில் பேனா சின்னம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஆந்திரா, கர்நாடகா போன்ற கடலோர மாநிலங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்றும், மனுத்தாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடல் அரிப்பைத் தடுக்கும் விதமாக, மரங்களை நட வேண்டும் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார் . பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கி இருக்கும் அனுமதியை ரத்துச் செய்து பேனா சின்னத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்று அதிகாலை பிளக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ