செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் ஆய்வு செய்து ஏரியின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏரியில் 4700 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதாகவும்,அதே அளவிற்கு நீர் வெளியேற்றி வருவதாக தெரிவித்தார். உபரி நீர் வெளியேற்றத்தால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த அமைச்சர் ஏரியின் நீர்மட்ட்ம தற்போது 23 அடியை தாண்டியுள்ளதாகவும் ஏரியை 22 அடியில் வைத்து கண்காணிக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார்.
இந்த் ஆய்வின் போது எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இட ஒதிக்கீடு ஆர்பாட்டம் பாமக வின் அரசியல் நாடகம் – ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி பாலசந்திரன்