Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுவை ஜிப்மரில் நோயாளிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் ஆணை நிறுத்திவைப்பு

புதுவை ஜிப்மரில் நோயாளிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் ஆணை நிறுத்திவைப்பு

-

புதுவை ஜிப்மரில் நோயாளிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் ஆணை நிறுத்திவைப்பு

புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் அறிவிப்பை ஜிப்மர் ஒத்தி வைத்துள்ளது.

Free treatment will continue at pondy jipmer Hospital: Administration |  புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடரும்: நிர்வாகம்

புதுச்சேரி ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆயுஷ்மான்பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என ஜிப்மர் அறிவித்தது. மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைக்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கட்டணம் நடைமுறைக்கு வரவில்லை. அறிவிப்பை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் அனுப்பிய உத்தரவில், பெரும்பாலான புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைக்களுக்கான கட்டணம் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜிப்மர் இயக்குநர் ஒப்புதலின் படி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ