Homeசெய்திகள்தமிழ்நாடு400 பேரை பணிநீக்கம் செய்யும் ஸ்விக்கி - ஊழியர்கள் அதிர்ச்சி!

400 பேரை பணிநீக்கம் செய்யும் ஸ்விக்கி – ஊழியர்கள் அதிர்ச்சி!

-

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் பணிநீக்கத்தில் ஈடுபட்டன. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், மைரோசாஃப்ட், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கத்தில் ஈடுபட்டன. இதேபோல் பேடிஎம் நிறுவனமும் கடந்த ஆண்டு இறுதியில் சுமார் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில், பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அந்த நிறுவனத்தின் ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஏற்கனவே ஸ்விக்கி நிறுவனம் கடந்த ஆண்டு 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், 2வது கட்டமாக மீண்டும் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஸ்விக்கி நிறுவனம். இந்த முறை 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் தற்போது 6000 ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, நிர்வாகம் உள்ளிட்ட பரிவுகளில் பணியாற்றும் 400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய ஸ்விக்கி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிதி நிலைமையை சீரமைத்து செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ