ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வென்றுள்ளார். இம்முறை அதிமுக வேட்பாளரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:
பதிவான மொத்த வாக்குகள் | 14,35,243 |
திமுக | 7,58,611 |
அதிமுக | 2,71,582 |
தமாகா | 2,10,222 |
நாதக | 1,40,201 |
மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் 60.25 ஆகும்.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்து 32-வது சுற்றுவரை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வந்தார்.
இறுதியாக 7,58,611 வாக்குகள் பெற்று டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். வெற்றிக்கான சான்றிதழை ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொறுத்தவரை 14,35,243 வாக்குகள் பதிவானது. திமுக, அதிமுக, தமாக, நாம் தமிழர் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேசமயம் இந்தத் தொகுதியில் 26,465 வாக்குகள் பெற்று 5-வது இடத்தை நோட்டா பெற்றுள்ளது.
போட்டியிட்ட 31 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் ஆகிய இருவரைத் தவிர பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் வேணுகோபல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 29 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அவர்களது டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.