தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்து குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி, பட்ஜெட்டில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.