
காவிரி விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இன்று (ஜூலை 04) காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரபாஸின் ‘சலார்’….. டீசர் ரிலீஸ் தேதி அப்டேட்!
அந்த கடிதத்தில், தமிழகத்திற்கு ஜூன் 9.19 டி.எம்.சி.யும், ஜூலை 31.24 டி.எம்.சி.யும் கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஆனால் ஜூன் மாத இறுதி வரை 2.7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று (ஜூலை 04) டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்திக்கிறார். அப்போது, மேகதாது அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரக்கூடாது; தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய தண்ணீரை வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளார்.
அடுத்த படமும் ஹிட்டுதான்…..நான்காவது முறையாக இணையும் அல்லு அர்ஜுன், த்ரிவிக்ரம் கூட்டணி!
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.