- Advertisement -
நெல்லையில் மழை பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட ஒன்றிய அரசு செய்யவில்லை என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம். இதுவரை நெல்லை அல்வா தான் ஃபேமஸ், இப்போது மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா தான் ஃபேமஸ். நிவாரணம் வழங்காததை கண்டித்தோம், அப்போதும் ஒன்றிய அரசு தரவில்லை. நீதிமன்றம் சென்றபிறகுதான் ஒன்றிய அரசு ரூ.276 கோடி வழங்கியது.