Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

-

- Advertisement -
kadalkanni

2025ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான முதல்கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. ஆளுநரின் உரை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. தொடர்ந்து, அவரது உரையை தமிழில் சபாநாயகர் வாசிப்பார், அத்துடன் கூட்டம் நிறைவடையும். பின்னர் சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

tamilnadu assembly

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அண்மையில் மரணம் அடைந்ததால், நாளை நடைபெறும் கூட்டத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அத்துடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அடுத்த 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  இது தொடர்பாக எதிர்க்கட்சியான அ.தி.மு.க., திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பாக எடுத்துக்கொண்டு விவாதிக்க கடிதம் வழங்கியுள்ளன. இதனால் ஆளுநர் உரை மீதான கூட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசிப்பாரா? அல்லது உரையை புறக்கணித்து வெளியேறுவாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.  முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய கீதம் முடிவதற்கு முன்பே வெளியேறி விட்டார். ஆளுநர் உரையில் இடம் பெற்ற அம்பேத்கரின் பெயர், திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. இதேபோல், கடந்த ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழில் உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தனது உரையை முடித்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உரையை முற்றிலும் புறக்கணித்தார்.

MUST READ