பஞ்சாப் மாநிலத்தில் நடந்த கபடி போட்டிகளில் பாரபட்சம் பார்க்கப்படுவதால் தமிழ்நாடு அணிகளுக்கு வெற்றி பாதிக்கப்படுவதுடன் மட்டுமில்லாமல் தாக்குதலுக்கும் உள்ளானோம் ; பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி செய்துள்ளது என்று டெல்லி வந்தடைந்த தமிழ்நாடு கபடி அணியினர் மேலாளர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைகழகங்களை சேர்ந்த 3 – அணிகள் கலந்து கொள்ள சென்றன. நேற்று அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின் போது திடீரென தமிழ்நாடு வீராங்கனைகள் தாக்கப்பட்டார்கள். வெற்றி பெறும் நிலையில் இருந்த தங்களது அணி வெற்றி பெற்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் தாக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள் தாக்குதலுக்கு ஆளான தமிழக வீராங்கனைகள். போட்டியின் நடுவரும் தங்களை தாக்கியதாக கூறினார்கள்.
நமது வீராங்கனைகள் தாக்கப்பட்டதை தடுக்க முயன்ற தமிழக அணியின் பயிற்சியாளரான தன்னையும் தனியாக அறைக்கு அழைத்துச் சென்று தாக்கினார்கள் என்றும் தாத்தியதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு தலையில் பலத்த காயம் அடைந்ததாகவும், ஒரு வீராங்கனைக்கு காலில் பலத்த காயமடைந்ததாகவும் கூறுகிறார் தாக்குதலுக்கு ஆளான பயிற்சியாளர் பாண்டியராஜன்.
பஞ்சாபில் இருந்து இன்று காலை 4 மணி அளவில் பேருந்து மூலம் டெல்லி வந்தடைந்த தமிழக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டதில் காயமடைந்த வீராங்கனைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளன.
தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேலாளர் கலையரசி போட்டியின் போது தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் கேள்ளிப்பட்ட உடனே தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியதுடன் மட்டுமில்லாமல் துணை முதல்வர் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதியளித்து 1 – லட்சம் ரூபாய் பணமும் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டது என்றும் கூறினார் அணியின் மேலாளர் கலையரசி
இன்று இரவு தமிழகத்திற்கு தங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு காயமடைந்த விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம்.
வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் தென் மாநிலங்களில் இருந்து வரும் அணிகள் பாரபட்சமாக நடத்தப்படுகிறதுடன் மட்டுமில்லாமல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதால் வெற்றி பாதிப்பதுடன் தாக்குதலுக்கும் உள்ளாவதால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விளையாட்டு வீரர்களை பெரிதும் பாதிப்படைய செய்கிறது என்பதும் இவர்களது கருத்தாக உள்ளது.
இந்திய வருமான வரிசட்டம், GST சட்டம் சுத்தியால் அடித்து பெறுவது போல தான் உள்ளது!