இந்தியாவிலேயே அதிகமான உடல் உறுப்புகள் தானம் செய்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
ஒருவர் இறக்கும் முன்பு அவரது உடல் உறுப்புகளானது தானம் செய்யப்படுகிறது. இதனால் பலருக்கு வாழ்க்கையில் மறுவாழ்வு கிடைக்கிறது. உடல் உறுப்பு தானம், மிக உயரியதாக கருதப்படுகிறது. இதனால் உடல் உறுப்பு தானம் அவசியம் குறித்து, சுகாதார துறை தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது, அரசு மற்றும் தனியார் உடல் உறுப்புகள் மறுவாழ்வு மையத்தில், இந்த ஆண்டில் மட்டும் 262 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
தானம் செய்த உடல் உறுப்புகள் விவரம் :
நுரையீரல்- 85, கல்லீரல்- 203, இதயம்- 91, சிறுநீரகம்- 442, கணையம் 3, சிறுகுடல்- 6 மற்றும் கைகள்- 3
உடல் உறுப்புகள் மறுவாழ்வு மையம் திட்டம் 2008ம் ஆண்டு முதல் முதலில் துவங்கப்பட்டது. அப்போது 7 பேர் மட்டுமே உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். தற்போது, இந்த ஆண்டில் புதிய சாதனையாக 262 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர்.