Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

-

- Advertisement -

 

"தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38- வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்க்கின்றான். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்தது வருகிறது. பண்டைய காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, கங்கைக்கொண்ட சோழபுரம் ஆகியவை கல்வியில் சிறந்து விளங்கியது.

பட்டங்களைப் பெறும் மாணவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிரதமர்!

நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான திறன்களை வளர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74- லிருந்து 150 ஆக உயர்ந்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ந்த இந்த பட்டமளிப்பு விழா. இளைஞர்கள் அதிகம் இருக்கும் தமிழகத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமராக இருப்பதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கோள் காட்டினார். அத்துடன், எனது மாணவ குடும்பமே என தமிழில் சில சொற்களையும் கூறினார் பிரதமர்.

MUST READ