நாடாளுமன்ற தேர்தலையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன். நாடாளுமன்ற தேர்தல் வருகையையொட்டி மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.