தமிழகத்தில் தஞ்சாவூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 24 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஜூலை 23) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
கடந்த 2019- ஆம் ஆண்டு பா.ம.க.வின் நிர்வாகி ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக்கின் நெல்லையில் உள்ள இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த பக்ருதீன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உசிலங்குளத்தில் உள்ள பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகி ரசித் முகமது வீடு, திருச்சி மாவட்டத்தின் பீமநகர் பண்டரினாதபுரம் ஹாஜி முகமது உசேன் என்பவரது வீடு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் பேரையூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூரில் உள்ள நிசார் அகமது என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!
இதனிடையே, கோவை மாவட்டம், கோட்டைமேடு பகுதியில் அப்பாஸ் என்பவரது வீட்டில் சுமார் மூன்று மணி நேரமாக சோதனை நடந்த நிலையில், அப்பாஸின் ஆதார் பான் கார்டுகளை அதிகாரிகள் பெற்றுச் சென்றனர். அத்துடன், மதியம் 12.00 மணிக்கு கோவையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராஜ அப்பாஸுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.