Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

-

- Advertisement -

 

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!
Photo: NIA

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (செப்.16) காலை 07.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுமார் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திரு.வி.க. நகரில் முஜுபீர் ரகுமான், நீலாங்கரையில் புகாரி, அயனாவரம் முகமது ஜக்கரியா வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல், கோவை மாவட்டத்தின் உக்கடம், ஜிஎம் நகர், போத்தனூர், கரும்புக்கடை, கிணத்துக்கடவு, ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் உள்ள முகமது இத்ரிஸ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக சுமார் 30- க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை 82வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முபஷீரா, தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தமிமுன் அன்சாரி வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6ஆவது முறையாக நீட்டிப்பு!

கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினுடன் படித்த 22 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ