தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 28) டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வாழ் தமிழர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
“10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்”- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “தமிழகத்திற்கும், ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம். தமிழ்- ஜப்பான் மொழிகளுக்கிடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழைக் காப்பது என்பது தமிழினத்தைக் காப்பதாகும். ஜப்பான் தமிழர்களின் அன்பான வரவேற்பை நான் மறக்க மாட்டேன். தமிழகத்திற்கு வாருங்கள், உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது”எனத் தெரிவித்துள்ளார்.
நாளிதழ் செய்திகளை ‘ஐ-பேடில்’ படித்தப் படியே புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!
இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு இ.ஆ.ப., ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், ஜப்பான் தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.