Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும்"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

"தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும்"- வானிலை ஆய்வு மையம் தகவல்!
File Photo

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (மே 14) முதல் மே 18- ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், இன்று முதல் மே 18- ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் உயரக்கூடும்.

முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன?- விரிவான தகவல்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ