தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.
‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’-ல் வெளியான அதிரடி அறிவிப்புகள்!
அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, “கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கும் இல்லம் அமைக்கப்படும். திருப்பரங்குன்றம் மற்றும் திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும். பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்; குறளகம் நவீனப்படுத்தப்படும். 3,000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு ரூபாய் 12,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். புதுகை- கட்டுமாவடி, ராமநாதபுரம்- அரியமான், தூத்துக்குடி- காயல்பட்டினம், நெல்லை- கோடாவிளை, சென்னை- மெரினா, கடலூர்- சில்வர் பீச், விழுப்புரம்- மரக்காணம், நாகை- காமேஸ்வரம் கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
அ.தி.மு.க.வில் பிப்.21 முதல் விருப்ப மனு விநியோகம்!
நாமக்கல், சேந்தமங்கலம் உள்ளிட்ட நான்கு ஒன்றியங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் ரூபாய் 360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூபாய் 440 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூபாய் 20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும்.
இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனம் என போட்டிகள் நடத்தப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்படும்; மதுரை, சேலம் மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.