தமிழ்நாடு பட்ஜெட்- புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது உரையாற்றிய அவர், ”வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 8 நகரங்களில் சங்கமம் கலைவிழா நடத்தப்படும். சங்கமம் கலை விழாவுக்காக வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு.
பல்வேறு துறைகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு
தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 7 ஆயிரத்து 461 வீடுகள் கட்டப்படும். இலங்கை தமிழர்களுக்காக மேலும் 3,593 வீடுகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு
அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும்.
திமுக அரசின் 2 ஆண்டு தொடர் முயற்சியால் மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த அண்டு திறக்கப்படும்.
பாளையங்கோட்டை சித்த மருத்துக் கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.11 கோடி செலவில் 4,5 ஆம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுப்படுத்தப்படும்” எனக் கூறினார்.