Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் தமிழர் கட்சியின் சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்....முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

-

 

"கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: DMK

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உத்தரவிட்டுள்ளது.

என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள், இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ