Homeசெய்திகள்தமிழ்நாடு’தமிழ்நாடு நாள்’- கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

’தமிழ்நாடு நாள்’- கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

-

’தமிழ்நாடு நாள்’- கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டது. அத்தகைய தமிழர் வரலாற்றில் முக்கியமான இந்நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.

Image

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் அன்னைத் தமிழ் நிலத்திற்கு உரிமைக்காப்பாக, பேரறிஞர் அண்ணா மீட்டளித்த இனமானப் பெயர் ‘தமிழ்நாடு’. பகைவர் அஞ்சும் சொல்லாக நிலைபெற்றுவிட்ட வரலாற்றுப் பெயரும் இதுவே. ஒன்றுபட்ட வளர்ச்சியின், தன்னாட்சி அதிகாரத்தின் சான்றாகவும் நம் சுயமரியாதைக்கு அடையாளமாகவும் திகழும் தமிழ்நாட்டை ஓங்கி ஒலிப்போம். அனைவருக்கும் #தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒரு சட்டமன்ற தீர்மானத்தோடு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கனவையும் நிறைவேற்றும் விதமாக தமிழ் நிலப்பரப்புக்கு ‘தமிழ்நாடு’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரிட்ட நாள் இன்று. முத்தமிழ் அறிஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை, தமிழ்நாடாகவே போற்றி பாதுகாக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தினத்தை தமிழ்நாடு நாள் என்று அறிவித்தார்கள்.

மாநிலத்தின் பெயர்ச்சொல் என்றில்லாமல் நம் அனைவரின் உயிர் சொல்லாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு வாழ்க. அனைவருக்கும் #தமிழ்நாடு_நாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

MUST READ