தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. இன்று (ஜூன் 30) பணி ஓய்வுப் பெற்றார்.
அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை- தங்கம் தென்னரசு
யார் இந்த சைலேந்திர பாபு இ.கா.ப.?- விரிவான தகவல்!
கடந்த 1962- ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறைப் பகுதியில் பிறந்தவர் சைலேந்திர பாபு. விவசாயம், பொதுச்சட்டம், மக்கள் தொகைக் கல்வி உள்ளிட்டப் பாடங்களில் பட்டம் பெற்றவர். ‘காணாமல் போன குழந்தைகள்’ குறித்த ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார் சைலேந்திர பாபு. 1987- ஆம் ஆண்டு இந்திய காவல் பணி அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய சைலேந்திர பாபு பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்- திருமாவளவன்
நீச்சல், தடகளம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை சைலேந்திர பாபு வென்றுள்ளார். காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குடியரசுத் தலைவர் விருது, பிரதமர் விருது, முதலமைச்சர் விருது, வீர தீர் செயலுக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.
‘நீங்களும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம்’, ‘சாதிக்க ஆசைப்படு’ போன்ற நூல்களையும் சைலேந்திர பாபு எழுதியுள்ளார்.