Homeசெய்திகள்தமிழ்நாடு"முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு"!

“முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு”!

-

 

"முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு"!
Photo: TNEB

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிச் செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணி

இது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்களுக்கும், நிர்வாக இயக்குநர்களுக்கும் மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “முக்கிய பிரமுகர் வருகை, பிரதான அரசு நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு நடைபெறும் இடத்தை ஆய்வுச் செய்ய வேண்டும். நிகழ்வு நடைபெறும் இடத்தை ஆய்வுச் செய்து மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில், வைத்திருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும். அதேபோல், அத்தகைய இடங்களில் மின்வாரியப் பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையின் போது, விமான நிலையத்திற்கு வெளியே ஜிஎஸ்டி சாலையில் மின்தடை ஏற்பட்ட நிலையில், மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ