
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம், மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கனைப் பெற்றுக் கொண்டு, நேற்று (ஜூன் 19) நள்ளிரவு சுமார் 600 விசைப்படகுகளில் சுமார் 3000- க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!
இந்த நிலையில், நள்ளிரவில் மீன்பிடித்து விட்டு, அதிகாலை கரைத் திரும்பும் போது, நெடுந்தீவு என்ற பகுதியில் அந்தோணிசாமி என்பவரின் விசைப்படகு பழுதாகி நின்றது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், அந்த படகில் இருந்த அந்தோணி சாமி, இயேசு ராஜ், ரூபன், முத்து, ஜான்சன், லெனின் உள்பட ஒன்பது மீனவர்களை கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசாரணை நடைபெற்று வருகிறது.
“பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 8.1% ஆக அதிகரிக்க வாய்ப்பு”- எஸ்பிஐ தகவல்!
இதனிடையே, விசைப்படகு பழுதுக் காரணமாக, படகு எல்லைத் தாண்டி வந்துள்ளது என்று கூறியும், இலங்கை கடற்படையினர், அவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.