Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது"- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!

“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!

-

 

"தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது"- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!

தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஒரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது என்று தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்

மக்களவையில் இன்று (பிப்.06) தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வெள்ள நிவாரண நிதி தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் பொருளாளரும், தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, “வெள்ள நிவாரணம் குறித்து பேசும் போது, தொடர்பின்றி குறுக்கிட்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார். தொடர்பு இல்லாத அமைச்சர் குறுக்கிட வேண்டாம் என்று தான் நான் குறிப்பிட்டேன். பட்டியலின அமைச்சரை அவமதித்துவிட்டதாக சித்தரித்து பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்புச் செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் உரை முழுவதும் காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டியிருந்தார். எல்.முருகனை அவமதித்துவிட்டதாகக் கூறி பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவிப்பது தவறானது. NDRF நிதி பற்றி பேசும் போது, SDRF நிதி பற்றி எல்.முருகன் பதில் சொல்கிறார்.

மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது – மு.க.ஸ்டாலின்

நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 08- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று கருஞ்சட்டை அணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.

MUST READ