சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் 313 கோடி ரூபாய் மதிப்பிலான 14 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (பிப்.26) தொடங்கி வைக்கிறார்.
கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர் சுவாரஸ்ய தகவல்….
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் 11,391 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து பொது சுகாதார ஆய்வகங்கள், அவசர கால சிகிச்சை மையங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டுகிறார்.
இது தவிர கோவையில் நுண்ணியிரியல் உணவு ஆய்வுக்கூடம், சென்னை ஆவடியில் மத்திய அரசின் சுகாதாரத்திட்ட நலவாழ்வு மையம், சென்னை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நலம் மையம் மற்றும் ஆய்வகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.
ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…
இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்திலும் மருத்துவத்துறையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைக்கவுள்ளார்.