Homeசெய்திகள்தமிழ்நாடுவெளிமாநிலங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை.... பெண் அதிகாரியை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் வாக்குவாதம்!

வெளிமாநிலங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை…. பெண் அதிகாரியை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் வாக்குவாதம்!

-

 

வெளிமாநிலங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை.... பெண் அதிகாரியை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் வாக்குவாதம்!
Video Crop Image

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று (மே 26) காலை 07.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!

தமிழகத்தில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீடு, அலுவலகத்தில் சுமார் 10 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலும், கேரளா மாநிலத்தின் பாலக்காட்டிலும், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலும் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் அமைச்சரின் நண்பர் ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், அமைச்சரின் சகோதரர் அசோக்கின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜப்பான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதனிடையே, கரூரில் அமைச்சரின் சகோதரரின் வீட்டில் சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர். பெண் அதிகாரியிடம் ஐ.டி. கார்டைக் காட்டுங்கள் என்று தி.மு.க.வினர் சத்தமிட்டும், மிரட்டும் வகையிலும் கேட்டுள்ளனர். இதையடுத்து, தனது ஐ.டி. கார்டை எடுத்துக் காண்பித்து சென்றார் பெண் அதிகாரி.

பெண் அதிகாரியை வளைத்து தி.மு.க.வினர் கேள்வி மேல் கேள்வி கேட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் வந்த மூன்று மூன்று அதிகாரிகளும் சோதனை செய்யாமல் காரில் திரும்பிச் சென்றனர்.

MUST READ