Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (ஜூன் 25) முதல் ஜூன் 29- ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

“ஜூலை 1- ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்”- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கக் கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியே இருக்கக் கூடும்.

கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும். தென்மேற்கு, மத்திய மேற்கு, வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். வரும் ஜூன் 29- ஆம் தேதி வரை லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ